Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் இருமலை குணமாக்கும் அற்புத மருந்து எது தெரியுமா....?

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (16:37 IST)
அதிமதுரம் இருமலுக்கு அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, பேரிச்சங்காயின் சதை இவற்றில் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து, பொடி செய்து, ஆறு பங்கு வைத்து மடித்து வைத்துக் கொள்ளவும்.

ஆழாக்குப் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு, இந்தத் தூளில் ஒரு பங்கை எடுத்து ஒரு துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி இந்தப் பாலில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, அந்தப் பாலை இறக்கி இளஞ்சூடாக இருக்கும் பொழுது கற்கண்டு பொடித்துப் போட்டுக் கலக்கிக் குடிக்க வேண்டும். இந்த விதமாகக் காலை, மாலை மூன்று நாள் சாப்பிட இருமல் குணமாகும்.
 
அதிமதுரம் தூள் ஊறவைத்த நீரை பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. அதிமதுரம் பொடி கலந்த நீரை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். ஞாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும்.
 
அதிமதுரம், கோஷ்டம், சீரகம், கார்போக அரிசி வகைக்கு கிராம் எடை எடுத்து அரைத்து இரண்டாழாக்குத் தேங்காயெண்ணெயுடன் கலந்து வாணலியில் விட்டுக் காய்ச்சி மருந்து சிவந்தவுடன் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் வளரும்.
 
அதிமதுரம்  இருமல் நீக்கி மருந்தாக  செயல்படுகிறது .இதனால் இருமலின் அறிகுறி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வறண்ட தொண்டையை பாதுகாக்கவும் உதவுகிறது.
 
அதிமதுரம் தூள்  கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும். சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. 
 
அதிமதுரம்  தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு  வேலை  ஆண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆண்மை குறைவை தடுக்கலாம். இந்த அதிமதுரத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம் .
 
ஆண்களுக்கு ஏற்படும் இளநரை மற்றும் ஆஸ்துமா போன்ற சிக்கல்களையும் எளிதில் சரி செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments