Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பழத்தில் என்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

Webdunia
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.


மாம்பழத்தில் மார்பக ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.
 
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
 
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. மேலும் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம்.
 
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
 
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
 
கருப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
 
சப்போட்டாவில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments