இதய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறதா கடலெண்ணெய்....?

Webdunia
புதன், 11 மே 2022 (15:08 IST)
வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கடலெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது சமையலுக்கு அதிகமாக பயன்படுகிறது.


100 கிராம் வேர்க்கடலையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புசத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், மெக்னீசியம், துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ், தண்ணீர் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறைகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் 50 கிராம் அளவு கடலையை தாராளமாக சாப்பிடலாம்.

வெல்லத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் முதுகு வலியில் இருந்து விடுபடலாம். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. சர்க்கரை நோய் வராமல் கட்டுக்குள் வைக்கலாம்.

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கிறது. மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளதால் இதய பிரச்சனைகளில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. புரதச்சத்து இல்லாதவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அவர்களுக்கு சிறந்த உணவாக வேர்க்கடலை விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments