கரும்பினை அடிக்கடி உண்ணும்போது சரும வீக்கம் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் கரும்பானாது சருமசுருக்கம், வயதான தோற்றம், வடுக்கள், காயங்கள் ஆகிவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவு பெறச் செய்கிறது.
கரும்பில் உள்ள கால்சியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் எலும்பு பாதிப்பினால் உண்டாகும் ஆஸ்டிரோபோரோஸிஸ் நோய் ஏற்படாமல் கரும்பானது நம்மைப் பாதுகாக்கிறது.
தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாற்றினை அருந்தி வந்தால் வயதான காலத்திலும் எலும்புகளை நாம் பாதுகாக்கலாம். கரும்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதற்கு காரதன்மை வழங்குகின்றன. எனவே இதனை உண்ணும்போது செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்பட்டு செரிமானம் நன்கு நடைபெறுகிறது.
கரும்பில் இயற்கையான நார்ச்சத்துகள் அதிகளவு உள்ளன. இவை உணவினை நன்கு செரிக்கத் தூண்டுவதோடு மலமிளக்கியாகவும் செயல்படுகிறன்றன. இதனால் உடலில் உள்ள கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு எளிதில் வெளியேற்றப்படுகின்றன. குடல் வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படாமல் கரும்பானது நம்மைப் பாதுகாக்கிறது.
கரும்பானது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைடுகள் ஆகியவற்றை நீக்குகிறது. நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
கரும்பில் உள்ள நீர்ச்சத்து மற்றும் காரத்தன்மையானது சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கள், சிறுநீரகக்கற்கள் உண்டாதல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் சிறுநீரகத்தை கரும்புச்சாறானது சுத்தப்படுத்துதலில் உதவுகிறது. எனவே கரும்பினை உண்டு சிறுநீரகங்களைப் பாதுகாக்கலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிப்படைந்தவர்கள் கரும்புச்சாற்றினை அருந்தும்போது அது எளிதில் செரிமானம் ஆவதோடு பிலிரூபின் அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது. எனவேதான் கரும்புச்சாறானது மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்தாகும்.
கரும்பில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் கரும்பினை உண்ணும்போது பற்கள் எலும்புகள் வலுவடைகின்றன. மேலும் இதில் உள்ள தாதுஉப்புக்கள் வாய்நாற்றத்தினையும் சரிசெய்கின்றன.