கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.
உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது. கொய்யா பழத்தில் அதிகளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.