Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நெஞ்செரிச்சலை எப்படி சரிசெய்வது...?

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:10 IST)
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்று அமில உற்பத்தியை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுவதால் செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.


நட்சத்திர சோம்புவை எடுத்து வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். இது அசிடிட்டி அறிகுறிகளை குறைக்கும். நட்சத்திர சோம்புவை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வர அசிடிட்டி பிரச்சினை நீங்கி விடும்.

1 கப் தண்ணீரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

செரிமான பிரச்சினை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

சிறிது இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகி விடும். நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம்.

2 ஏலக்காயை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும்.

துளசி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். 6 துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments