Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் செய்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்...!!

Webdunia
சர்க்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. ஆகையால் சர்க்கரைக்கு பதிலாக சுத்தமான தேனை அருந்துவதன் மூலம் தொப்பை போடுவதை குறைத்து கொள்ளலாம்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற விடவும். பின் பூண்டு பற்களை நீக்கிவிட்டு காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தினால் தொப்பை குறையும். இதை தினமும் அருந்தி வர சிறந்த பலனை  பெறலாம்.
 
இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
 
இஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப் பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத் தொப்பை குறைவதைக் காணலாம்.
 
இஞ்சி சாரோடு நெல்லிக்காய் சேர்த்து காலையில் தினமும் வெரு வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
 
ஒருகைப்பிடி அளவு கொள்ளை முதல் நாள் இரவே நீரில் ஊறவிட்டு, காலையில் ஊறிய கொள்ளை வேகவைத்து அந்நீரை குடுத்து வர விரைவில் தொப்பை  குறையும்.
 
ஒழுக்கமான வாழ்க்கை முறை, மனச்சோர்வைத் தவிர்த்தல், உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல், நல்ல உடற்பயிற்சி போன்றவற்றால் முற்றிலுமாக உங்களின் தொப்பையைக் குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments