Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரிழிவை கட்டுப்படுத்துவதில் கொள்ளுவின் அற்புத பங்கு !!

Webdunia
உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்கவிரும்புபவர்கள் இரவில் ஒரு பிடி கொள்ளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து, கொள்ளை அப்படியே அல்லது சுண்டலாக்கி சாப்பிட்டு வந்தாலே நாளடைவில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். 

கொள்ளை முளைகட்டியும் சாப்பிடலாம். கொள்ளில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்காது. அதே நேரம் கார்போ ஹைட்ரேட் நிறைந்திருப்பதால் சக்தியும் இருக்கும்.
 
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக வெள்ளைப்போக்கு, பிரசவ கால அழுக்கு போன்ற பிரச்னை களுக்கு தீர்வு தரும் அருமருந்தாக கொள்ளு செயல்படுகிறது. பருவ  வயதுடைய பெண்கள் கொள்ளை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் மாதவிடாய் களைப்பை நீக்கும். அதிக இரத்தப்போக்கு உண்டாகும் போது உடலில் இழக்கும் சத்துக்களை ஈடு செய்கிறது. 
 
கொள்ளில் இரும்புச்சத்து உடன் பாஸ்பரஸ், கால்சியம், புரதம் போன்ற சத்துக்களும் உண்டு. விந்து எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் கொள்ளு உணவை  சேர்த்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டுத் தன்மையை நீக்கும் பக்கவிளைவில்லாத உணவுபொருள் கொள்ளு.
 
கொள்ளை ஊறவைத்து அந்த நீரை குடித்தால் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாகாமால் இருக்கவும் சிறுநீரக கற்களை  கரைக்கவும் இவற்றில் இருக்கும் இரும்புச்சத்தும், பாலிபினால் என்னும் வேதிப்பொருள்களும் செயல்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று கால்சியம் ஆக்சலேட்  என்னும் சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கரைக்க கொள்ளு உதவுவதாக தெரிவித்திருக்கிறது.
 
கொள்ளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது உணவில் கொள்ளு சேர்த்து வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிச்சயம் பலன் தரும்.
 
இவை தவிர கண் சம்பந்தமான பிரச்னைகள், உடலில் இருக்கும் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்புகள் கரைய, செரிமான பிரச்சனைகள் தீர்ந்து எளிதில் செரிமானமாக, தாதுவைப் பலப்படுத்த என பலவகைகளில் உடலுக்கு பயன் தருகிறது கொள்ளு. 
 
கொள்ளு உஷ்ணமிக்க தானியம் என்பதால் எற்கனவே உடல் உஷ்ணம் பெற்றவர்கள் வாரம் இருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வருவது நல்லது. மழைக் காலங்கள், குளிர் காலங்களில் ஏற்ற உணவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments