Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவத்தில் முக்கியமான மஞ்சள் தரும் அற்புத பலன்கள்...!

Webdunia
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை.  கல்லீரலைப் பலப்படுத்தும்.
மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள்,  சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
 
மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால்  இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.
 
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட  இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும். 10 நாள்களுக்குச் சிகிச்சையைத் தொடரலாம்.
 
மஞ்சளை நன்கு காய வைத்து, இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை 1 டம்ளர் நீரில் கலந்து பத்து  நிமிடங்கள் கொதிக்க வைத்து சுத்தமான மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சுத்தமான பஞ்சை நனைத்து கண்களில்,  மூக்கிலிருந்து பக்கவாட்டில் ஒரு நாளைக்கு ஆறு முறை வீதமாக விட்டு வந்தால் கண்ணில் நீர் வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
 
ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து  சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சளய் தூள் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு  இருமலுடன் வரும் காய்ச்சல் குணமாகும்.
 
மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய  முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
 
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
 
மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல்  வெப்பம் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments