Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம்...!

Webdunia
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை  சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத்  தருகிறது.
 
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை  நிறுத்துகிறது.
 
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை குணமாக்குகிறது.


 
மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல  ஆய்வுகள் கூறுகின்றன.
 
சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.
 
மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடி மயக்கம்  போன்றவை நீங்கும்.
 
மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments