Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை ஏற்படுத்துமா மைதா?

Webdunia
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும்  வேதிப்பொருட்கள் உள்ளன.

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து  இருதய கோளாறு, ரத்த அடைப்பு போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
 
மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை. எனவே இதனை உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகும்.
 
மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல், சிறுநீரக கல், இருதய கோளாறு நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லி கிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது.
 
மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. மைதா மாவில் செய்யப்படும் அனைத்து பலகாரங்களும் நமக்கு தீங்கு விளைவிக்கிறது. இது நமது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
 
மைதாவகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இண்டெஸ் கொண்டது. இதனை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது ரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் அது நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments