Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:54 IST)
கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது.


முள்ளங்கி குறைந்த கார்போஹைட்ரேட், மாவுச்சத்து இல்லாத, காய்கறிகளில் ஒன்றாகும். ஒரு கப் வெட்டப்பட்ட முள்ளங்கிகள் சுமார் 3.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை வழங்கும், அவற்றில் பெரும்பாலானவை நார்ச்சத்து ஆகும்.

முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் அளிக்கின்றன. முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் உள்ளன.முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

வெள்ளை முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது. முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் (அ) சர்க்கரை கலந்து குடித்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ளவர்களுக்கும், சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் கொடுக்கலாம்.

முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments