பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது. உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது.
உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும்.
தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை. தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.
தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 50 கிராம் அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்கை நன்றாக கழுவிய பிறகு மேல் தோலை நீக்கி காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியை இரண்டு கிராம் அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கருப்பை சார்ந்த நோய்களுக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.