Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நத்தைச் சூரி எந்த நோய்களுக்கு மருந்தாகிறது தெரியுமா...!!

Webdunia
நத்தைச் சூரி பூண்டு வகையைச் சார்ந்தது. இதன் வேர் மற்றும் விதை மருத்துவப் பயன் கொண்டவை. வேர் நோய் நீக்கும் தன்மை  கொண்டது.
நத்தைச் சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நோயின்  தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.
 
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன்  பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட, உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள்  வெளியேறும். 
 
நத்தைச்சூரி சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும் வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.
 
நத்தைச் சூரி வேரை பொடியாக்கி 10 கிராம் அளவு பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
 
நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பளம் அதிகம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கா?

எதிர்காலத்தில் ஆண்கள் இனமே இருக்காதா? குறைந்து வரும் Y குரோமோசோம்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தயிர் சாப்பிட்டால் சளி பிரச்சனை ஏற்படுமா?

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தேனை விட தேனடை உடல்நலத்திற்கு நல்லது..!

அடுத்த கட்டுரையில்
Show comments