Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!!

Webdunia
இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும்.
நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை  சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன்  கிடைக்கும்.
 
நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய  நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது,
நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில்  விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும். 
 
வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து  வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து  சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும்.
 
நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை,  மகோதரம், நீரடைப்பு குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments