Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் சோம்பு...!!

Webdunia
சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம் என்பதை  பார்ப்போம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும்,  மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. 
 
அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். தினமும்  காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
 
சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.
பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதாவது சோம்பை வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி  வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.
 
தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள “அனீதோல்”  எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments