ஆயில் புல்லிங்: ஈறு அழற்சியை குணப்படுத்த நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.
கிராம்பு: ஈறுகளில் வலியை உணரும்போது 2 கிராம்புகளை மெல்லுவதல், வெந்நீரில் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.
புதினா இலைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பல் துலக்கும் முன்பு வாயை கழுவுவதால் இவை வாய்க்கு நல்ல மணத்தை அளித்து சுவாச பிரச்சனையைத் தீர்க்கும்.
ஈறுகளில் கற்றாழையை சாறு எடுத்து, அதனை நேரடியாக தடவுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.
மஞ்சள். மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.