Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனங்கற்கண்டு !!

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனங்கற்கண்டு !!
, வியாழன், 10 மார்ச் 2022 (18:21 IST)
பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.


பாலில், பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் இவற்றுக்கு நல்லது. பனை நீரிலுள்ள சீனி சத்து, உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து, தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி, நல்ல புஷ்டியை தருகிறது.

வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம், பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு, பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

பனங்கற்கண்டில் இருக்கும் இரும்புச்சத்து, பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன், கண்நோய், ஜலதோஷம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டைக்கோஸ் ஜூஸ் !!