Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா பஞ்சாமிர்தம்...?

Webdunia
மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம். காலையிலும், மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவிற்கு உடல் ஆரோக்கிய மேம்படும். 

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூற  காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம்  இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம். பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம்.
 
இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.
 
தகுந்த பொருட்கள் கிடைக்குமானால் பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எளிது. தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தும்  பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுவே இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments