Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கித்திற்கு இன்றியமையாத கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நல்லெண்ணெய் !!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (14:58 IST)
நல்லெண்ணெய்யில் உள்ள அதிக அளவு மக்னேசியம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.


நல்லெண்ணெய்யில் ஜிங்க் என்னும் உடல் ஆரோக்கித்திற்கு இன்றியமையாத கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிக அளவு இருக்ப்பதை உறுதி செய்கிறது.

ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பெண்கள் இந்த எண்ணெய்யை அதிக அளவு உணவு மூலம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக அலசி வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் மற்றும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

சமையலுக்கு பயன்படுத்தப் படும் மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, இந்த எண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

நீரிரிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments