Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் பயன் தரும் சிறு நெருஞ்சில் செடி !!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:58 IST)
சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். 

நெரிஞ்சில் செடி இரண்டை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் உடன் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி குடிநீராக ஐம்பது மிலி அளவு இருவேளை, மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், சிறுநீர் சொட்டு சொட்டாக போதல் குணமாகும்.
 
நன்கு இடித்த நெறிஞ்சில் காயை 68 கிராம் எடுத்து, அதனுடன் கொத்தமல்லி விதை 8 கிராம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடித்து 40 மில்லி வீதம் அருந்தி வர நீரடைப்பு, சதை அடைப்பு, கல்லடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
 
நெருஞ்சி முள் விதைகளை பாலில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும். இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர் கட்டு சதை அடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.
 
நெரிஞ்சில் காயயையும் வேரையும் ஒரே அளவாக எடுத்து அதனுடன் பச்சரிசி சேர்த்து கஞ்சி வைத்து அருந்தி வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும்.
 
நெருஞ்சி முள் 30 மி.லி எடுத்து மோர் அல்லது பாலுடன் கலந்து கொடுக்க சிறுநீருடன் இரத்தம் போகுதல் குணமடையும். யானை நெறிஞ்சி செடிகளை நீரில் ஒரு மணி நேரம் போட்டு எடுத்த பின், அந்த நீரில் பட்டு நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு கரை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments