Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை பயன்களா...?

Webdunia
கேரட் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் : கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது.

கேரட், கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். மேலும் கேரட்டினை மென்று சாப்பிட்டும் பொது பற்களின் கரைகள்  போய்விடுகிறது. 
 
கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். தினமும் கேரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும். 
 
தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். மேலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய்  வராது. 
 
தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன. தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ரத்தத்தில்  உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.
 
நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது நமது கல்லீரலின் நலத்திற்கும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடக்கூடாது?

எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments