Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள் !!

Webdunia
உப்பை வெளியேற்ற - தீர்வு: காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.

புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்ற - தீர்வு: ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
 
வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற - தீர்வு: தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.
 
வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி - தீர்வு: காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.
 
கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்ற - தீர்வு: காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு  எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.
 
கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்ற - தீர்வு: இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து  பருகவும்.
 
உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்ற - தீர்வு: தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடக்கூடாது?

எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments