உடல் பருமனை குறைக்கும் உதவும் சில காய்கறிகள் !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (10:41 IST)
சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.


வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும். அதற்கு ஆளி விதையை அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம்.

உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்.

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments