Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக நோய் தொற்றுகளை முழுமையாக நீக்க உதவும் சுக்கு !!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:17 IST)
சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.


சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து, அதை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியவுடன், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும்.

சுக்கைத் பொடி செய்து, சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் தீரும். சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி குணமாகும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கஷாயம் போல செய்து பருகி வந்தால், கடுமையான சளி இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாகும். சுக்கு சிறிது எடுத்து அதை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். சுக்குடன், தனியா வைத்து சேர்த்து அதில் சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து சாப்பிட்டால், அதிக மது அருந்தியதால் ஏற்பட்ட போதை தெளிந்து இயல்பு நிலை உண்டாகும்.

சிறிது சுக்கு எடுத்து அதை சின்ன வெங்காயத்துடன் வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தேங்கியுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். இதனால் மலசிக்கல் தீரும். மேலும் சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியேறாமல் தேங்கி விட்டால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையையும் சேர்த்து, குடித்து வந்தால் சிறுநீரக நோய்த்தொற்றானது நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments