Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்துள்ள சுக்கு !!

Webdunia
சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு  கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
 
சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
 
தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
 
சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல்  துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments