Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் தேன் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

Webdunia
தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.
தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.
 
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். சரியளவு  தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற  உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
 
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும். ஒரு தேக்கரண்டி  அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
 
தேன் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
 
வெந்நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
 
தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். தினமும் தேன் சாப்பிட்டு வந்தால், காலை எழுந்தவுடன் ஏற்படும் சோர்வை போக்கலாம்.
 
வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேனை மழை நீர், கடுகு, நெய்  மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments