Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இத்தனை அற்புத பயன்களா...!!

Webdunia
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.

கொத்தவரங்காயில் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
 
கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
 
கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.
 
கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும். எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.
 
கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும் .பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

ஜலதோஷம், சளி பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments