Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முறைகளை பயன்படுத்தி தலைமுடியை பராமரிக்க சில டிப்ஸ்...!!

Webdunia
முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை  மறையும். இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
 
முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி  கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 
தலை முடி கருமை மினுமினுப்பு பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு  மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 
செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம்  மாறும்.
 
நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
 
சொட்டையான இடத்தில் முடி வளர: நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர  முடிவளரும்.
 
புழுவெட்டு மறைய: நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments