Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரண டீக்கு பதிலாக இதை ட்ரை பண்ணி பாருங்க....!!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (14:06 IST)
நம்மில் பல பேர் இந்த காபிக்கும், டீயிற்கும் அடிமை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த டீ அல்லது காபி குடிச்சே ஆக வேண்டும்.

காபியோ, டீயோ இல்லை என்றால் தலைவலிப்பது போன்றும், நாள் சரியாக செல்லாது போன்றும் பலர் சொவதுண்டு. அஇன்னும் எத்தனை நாட்களுக்கு சாதாரண டீ, காபியையே குடிப்போம். புதிய முயற்சியாக நாம் சில மூலிகை பானங்களை எடுத்து கொள்ளவது  ஒரு புதிய மாற்றமாகவும் இருக்கும், உடல் ஆரோக்கியத்தை காக்கவும் உதவும். எளிதில் கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு அருமையான மற்றும் சுவையான மூலிகை தேநீர் அல்லது காபி செய்து சுவைக்கலாம்.

1. பேரிச்சை விதை தேநீர்: தேநீர் சுவைக்கு இணையான எளிய செய்முறை கொண்ட பேரிச்சை விதை தேநீரில் தாமிரம், செலினியம், இரும்பு சத்து உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்துள்ளன. பேரிச்சை விதையை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை ஒரு டம்ளர்  நீரில் ஒரு தேக்கரண்டி என்ற அளவில் சேர்த்து கொண்டு கொதிக்க விட்டு பின்பு வடி கட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை  குடிக்கலாம்.

நன்மைகள்: இதனால் ரத்த சோகை, தோல் பிரச்சனைகள், நியாபக மறதி ஆகியவை சரியாகும்.

2. கற்பூரவல்லி இலை தேநீ: தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி அதனுடன் தேன்  சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி தேநீர் தயார்

நன்மைகள்: கற்பூரவல்லியில் வைட்டமின் "சி", இரும்பு சத்து, ஒமேகா 3, நார்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனை பருகி வந்தால் செரிமானக கோளாறு, சிறுநீரக தொற்று, ஆகியவை நீங்கும் மற்றும் புற்றுநோயையும் தடுக்கும்.

3. ஆரஞ்சு தோல் தேநீர்: ஆரஞ்சு தோலின் வெள்ளை பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி இரண்டு குவளை நீரில் போட்டு கொதிக்க  வைக்க வேண்டும். அதனுடன் தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும். பாதியாக சுண்டிய பிறகு எடுத்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

நன்மைகள்: இதில் வைட்டமின் "சி", ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ், ஆகியவை நிறைந்திருக்கின்றான. இதனால் ஏற்படும் நன்மை,  தோல் பிரச்சனை நீங்கி தோல் பொலிவு பெரும்.

இவ்வாறு எளிய முறையில் வீட்டிலேயே கிடைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு உடலுக்கு நன்மை அளிக்கும் பானங்களை தயார் செய்து சுவைத்து உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments