Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயனுள்ள அற்புத மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும் !!

Webdunia
முடக்கற்றான் இலை வெப்ப வீரியம் உள்ளது  இது துவர்ப்பும் கசப்பும் சுவையுடையது. இதனால் கிரந்தி கரப்பான் கீல் பிடிப்பு சினைப்பு குதிங்கால் வாதம் மலக்கட்டு போன்ற நோய்கள் தீரும் கசாயமிட்டு சாப்பிடலாம்.

நாயுருவி வேர்  பயன்மிக்க மருத்துவப் பொருளாகவும் இதனால் காமாலை தீரும் சளி குறையும். இதன் வேர் கொண்டு பல் துலக்கி வர பல் சம்பந்தமான வியாதி போகும். 
 
பப்பாளி பழங்களை குணமாக்க உள்ள பழங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் கண் ஒளியை அதிகரிக்கும்.  
 
ஒற்றை தலை வலி நீடித்து தொல்லை கொடுக்கும். ஆனால் மிளகு, பூண்டு, கடுகு, உளுந்து ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் குணமாகும். 
 
இடுப்பு வலி, கை கால் குடைச்சல் போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அதில் சிறிது தேனை கலந்து  பிசைந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி கைகால் குடைச்சல் நீங்கும். 
 
கடுமையான காய்ச்சலுக்கு கோரைக் கிழங்கை நீரிலிட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் நன்றாக வியர்க்கும்  காய்ச்சலும் தணியும்.
 
இடைவிடாத இருமலுக்கு அதிமதுரத்தை தூள் செய்து அதில் கொஞ்சம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் போதும். இருமல் தொண்டை கரகரப்பு இருந்தாலும் போய்விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments