Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பாதத்தில் உள்ள கருமையை நீக்கும் வழிகள் !!

Webdunia
புதன், 25 மே 2022 (16:51 IST)
ஒரு எலுமிச்சையின் சாற்றை எடுத்து, அதில் சிறிது தேனை சேர்த்துப் பாதங்களில் தடவி வைக்கவும். 30 நிமிடங்களுக்குப் பின் கழுவவும்.


எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து பாதங்களின் மேல் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாற்றை பெரும்பாலும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க பயன்படுத்துவார்கள். உருளைக்கிழங்கின் சாறு இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட்.

பச்சையான உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து, அதை நேரடியாக மேல் பாதத்தில் தடவவும். 10-12 நிமிடங்கள் வைத்திருந்து, காய்ந்தவுடன் கழுவவும். கருமை நீங்கும்.

பப்பாளியில் இயற்கையான என்சைம்கள் நிறைந்துள்ளன. மேலும் தேன் ஓர் இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை மென்மையாக்க வல்லது; ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கிள்களை நீக்கும். பப்பாளி, தேன் பேக் கொண்டு எளிதாக பேக் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

பழுத்த பப்பாளி 4-5 க்யூப்ஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, ஒரு ஸ்பூன் கொண்டு மசித்து பேஸ்ட் போல கலக்கவும். இந்த பேஸ்ட்டை மேல் பாதம் முழுவதும் தடவி 20-30 நிமிடங்களுக்கு உலரவிட்டு, பிறகு தண்ணீரில் கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments