Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் என்ன...?

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:57 IST)
வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.


ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது : வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு வகை பருப்புகள் மற்றும் பெர்ரி வகைகளை காட்டிலும், வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம், மெலடோனின், கரோட்டினாய்டுகள் போன்ற சிறந்த உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த வால்நட்சில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments