Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதுளையை தினமும் உட்கொள்வதன் மூலம் என்னவெல்லாம் நன்மைகள்...!!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (11:35 IST)
மாதுளையில் ஒரு நல்ல அளவில் ஆன்டிபயோடிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இருக்கின்றன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்த விதமான மெழுகும் இல்லாத பழங்களை உட்கொள்ள வேண்டும். மாதுளைப் பழத்தின் சாறு கர்ப்பிணிப் பெண்ணுகளுக்கு நன்மை பயக்கிறது.

மாதுளை ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இது, உச்சந்தலையில் உள்ள இரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது. சிக்கலான, பலவீனமான, உயிரற்ற முடியை வலுப்படுத்த உதவுகிறது.

மாதுளை முடியை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது. மாதுளை கூந்தலின் நன்மைக்காக  வைட்டமின்கள் மற்றும் சத்தான பொருட்களை வழங்குகிறது. மாதுளை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது கூந்தலுக்கு நன்மை அளிக்கிறது. தயிரில் மாதுளை சாறு கலந்து ஹேர் மாஸ்கைத்  தயார் செய்து தலைமுடியில் தடவவும். இது முடியின் வேரை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தலைக் குறைகிறது.

மாதுளையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இவை பல வகையான தோல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. கொலாஜனை அதிகரிப்பதன் மூலம் மாதுளை தோலில் உண்டான முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்கிறது.

மாதுளை தினமும் உட்கொள்வதன் மூலம் சருமத்திற்கு நன்மை பயக்கிறது.  வறண்ட சருமம்  மற்றும்  எண்ணெய் சருமம், என  இரண்டு வகையான சருமத்திற்கும் மாதுளை  நன்மை பயக்கிறது. மாதுளை சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்கிறது. சருமத்தில் முகப்பரு பிரச்சினை இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் மாதுளையை  அரைத்து தேய்ப்பது நிவாரணம் அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments