Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?

Webdunia
சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது.
சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ப்ழச்சார்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.
 
நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நன்கு குறையும்.
 
அதிக உஷ்ணத்தால் வரும் தலைவலி போக்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட்டு வைத்தால் தலைவலி  நீங்கும்.
 
அஜீரணக்கோளாறு இருப்பவர்களும் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் தாகம் ஏற்படாது. மேலும்  உடலின் வறட்சியை போக்கும் நல்ல நிவாரணி.
 
கை, கால் எரிச்சல் உள்ளவர்கள் எரிச்சல் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினாலும் சுரைக்காயை கட்டி பயன்படுத்தலாம்.
 
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடை குறையும். ஆகவே இதனை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை  சிறுசிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் இட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments