Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வல்லாரை கீரையை எதனுடன் சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கும்...?

Webdunia
வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூலையையும் சுறுசுறுப்படையச் செய்யும். இதில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
* கைப்பிடி அளவு வல்லாரை இலை இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம்  சாப்பிட்டு வர இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும். வல்லாரை இலையை தின்று வர உடல் உஷ்ணம் தணியும்.
 
* வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மீது தடவி வர, புண்கள் சீக்கிரத்தில் ஆறும். 10 கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.
 
* வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.  அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.
 
* வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.
 
* வல்லாரைச் சாறு, தேனுடன், மணத்தக்காளிச் சாறையும் கலந்து காமாலை கண்டவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிவிரைவில்  காமாலை குணமாகும்.
 
* வல்லாரை இலையுடன் வெந்தயமும் சேர்த்துக் குடிநீரிட்டு, 1 அல்லது 2 சங்கு குழந்தைகளுக்குப் புகட்ட, காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள்  தீரும்.
 
* வல்லாரை கீரையை அனுதினமும் உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் வலிமை பெறும். வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments