Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவைக்காய் இலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன...?

Webdunia
தமிழ்நாடு முழுவதும், சமவெளிப் பகுதியில் வேலியோரங்களிலும் புதர்களிலும், பாழ் நிலங்களிலும் பரவலாக வளர்கின்றன. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; முறைக்  காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.
 
கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.
 
கோவைக்காயில், சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன  குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும்  குடித்து வர வேண்டும். 7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல்  பூச்சாகப் பூச வேண்டும். 
 
கோவைக்காய் இலையை ஒரு பிடி அளவு எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க  வேண்டும். 7 நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments