Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது முந்திரி பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?

Webdunia
முந்திரிப்பழத்தில் வைட்டமின் சி அதிகம். சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் இந்தப் பழத்துக்கு உண்டு.


முந்திரிப்பழத்தை தண்ணீரில் போட்டு அரைமணி நேரத்துக்குப்  பிறகு, பழத்தைத் தனியாக எடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்தால், உடல் எடை குறையும்.
 
கரோட்டின் சத்து இருப்பதால், பார்வைத் திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முந்திரிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலமாகும். தசைகளை நன்றாகச் சுருங்கி விரியச் செய்யும். இதயத்துக்கு நல்லது.
 
முந்திரிப்பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது, தோலுக்கு நல்லது. முந்திரிப்பழத்தை பறித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திட வேண்டும். இல்லையெனில்  அழுகிவிடும்.
 
முக்கியமாக வைட்டமின்-சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிப்பழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது. வைட்டமின்-சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.
 
மனிதர்களை அச்சுறுத்தும் நீரிழிவு, ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும் தன்மை உடையது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின்-சி குறைபாட்டை களைகிறது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்குகிறது. 
 
முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments