Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்கள் பரவும் காலங்களில் எந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்...?

Webdunia
இரு வேளையும் முதலில் இஞ்சி ஒரு விரல் அளவு இஞ்சியை எடுத்து அதை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அல்லது டீயில் போட்டோ குடிக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு வேளைகள் குடிக்கலாம்.

பிறநாட்டு பழங்களை தவிர்த்துவிட்டு உள்ளூரில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது  நல்லது.
 
பாலில் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, துளசி இலை, ஏலக்காய், பனை வெல்லம், உலர்ந்த திராட்சை சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து  எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம். மேலும் கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.
 
பழ வகைகள் இரண்டாவது பச்சைக் காய்கறிகள். அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை கீரை உள்ளிட்ட கீரை வகைகளை சாப்பிட்டால் மிகவும் நல்லது. மூன்றாவதாக பார்த்தால் வைட்டமின் சி இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். 
 
கொய்யாப்பழம், ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிடலாம். துளசி இலைகளை 2 அல்லது 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்வது நல்லது.
 
மஞ்சள் அடுத்து கடைசியான விஷயம் மஞ்சள். கிருமிநாசினியான மஞ்சளை தினந்தோறும் உணவில் சேர்த்து வர வேண்டும். ஒரு டீஸ்பூன் மஞ்சளை சாம்பார்,  ரசம் உள்ளிட்டவற்றில் சாப்பிடலாம். இதையெல்லாம் சாப்பிட்டால் நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். மிகவும் நல்லது. முக்கியமாக வைரஸ் பரவும் காலங்களில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments