Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் எவை தெரியுமா...!

Webdunia
நமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்பட கூடும்.
உங்களை எந்த நோய்களும் அண்டாமல் வைத்து கொள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்தாலே போதும். இதில் நோய் எதிர்ப்பு  சக்தியை இரட்டிப்பாக்க கூடிய தன்மை இந்த வெள்ளை அணுக்களுக்கு தான் உள்ளது. 
 
நமது உடலானது ரத்த அணுக்களால் உருவானது. நமது உடலின் முழு இயக்கத்தையும் இந்த ரத்த அணுக்கள் தான் நிர்ணயிக்கின்றன. இவை  எண்ணிக்கையில் அதிகரித்தால் நமது உடலுக்கு நல்லது. 
 
வெள்ளை அணுக்களை அதிகரிக்க:
 
அதிமதுரம்: வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய ஆற்றல் இந்த அற்புத மூலிகைக்கு உள்ளதாம். இவை எதிர்ப்பு  சக்தி மண்டலத்தை வலுபடுத்தி நோய்களை தடுத்து நிறுத்துகிறது. இதற்கு காரணம் அதிமதுரத்தில் உள்ள மருத்துவ குணம் தான். வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதோடு உடல் வீக்கங்களையும் சேர்த்தே குறைக்குமாம்.
ஓமம்: பலவித மருத்துவ குணங்கள் இந்த ஓமத்தில் ஒளிந்துள்ளன. தொற்றுகளினால் ஏற்பட கூடிய நோய்களை இந்த ஓமம் தடுத்து நிறுத்தும்.  இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
 
பப்பாளி இலை: பப்பாளி இலையில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க கூடிய தன்மை நிறைந்துள்ளதாம். கை நிறைய பப்பாளி  இலையை எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிது நீர் சேர்த்து வடிகட்டி கொண்டு கொண்டு, 1 ஸ்பூன் அளவு  குடிக்கலாம். இதனுடன் தேனும் சேர்த்து, கலந்து குடிக்கலாம்.
கிரீன் டீ: தினமும் வெறும் டீயிற்கு பதிலாக கிரீன் டீ குடித்து வந்தால் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை  அதிகரித்து நோய் கிருமிகளை அழித்து விடும். 
 
பூண்டு: எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்களுக்கு இந்த எளிய மருந்து ஒன்றே போதும். அதாவது, பூண்டை உணவில் சேர்த்து கொண்டாலோ  அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க கூடும்.
 
இஞ்சி: நமது வீட்டில் இருக்க கூடிய மூலிகை தன்மை வாய்ந்த உணவுகளில் இந்த இஞ்சி தான் முதன்மையான இடத்தில் உள்ளது. நீரை கொதிக்க விட்டு அதில் ஒன்று துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொண்டு எலுமிச்சை சாறு, தேன் கலந்து  குடிக்கலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 
வெள்ளை அணுக்களை உயர்த்த வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த மேற்சொன்ன மூலிகைகளை தவிர, முளைக்கீரை, கேரட்,  யோகர்ட், ப்ரோக்கோலி, ஒமேகா 3 அதிகம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எளிதாக வெள்ளை ரத்த அணுக்களை  அதிகரித்து நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

மழை காலத்தில் வரும் நோய்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தோல் அரிப்பு ஏற்படுவது எதனால்? என்ன தீர்வு?

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு காராசேவ் செய்வது எப்படி?

குடமிளகாய் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments