Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வெள்ளை வெங்காயம் !!

Webdunia
கோடையில் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் வெள்ளை வெங்காயத்தை அன்றாடம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுமாறும் நிபுணர்கள்  பரிந்துரைக்கின்றனர்.

வெள்ளை வெங்காயம், குடல் பாக்டீரியா பன்முகத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது ஒரு ப்ரிபயாடிக்காக செயல்படுகிறது. மேலும் நம் வயிற்றுக்கு நல்லது செய்யும் ஸ்டார்ச் தன்மை இதில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
 
செரிமான கோளாறு மற்றும் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சனைகளைத் தடுக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள செலினியம்,  நோய் எதிர்ப்பு சக்தியை நிர்வகிக்க கூடிய சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
 
இதயம் தொடர்பான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக வெள்ளை வெங்காயம் இருக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை வெள்ளை வெங்காயம் மேம்படுத்துகிறது.
 
எப்போதும் உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருவது இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனையில் இருந்து காக்கிறது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் வருவது, தொடர் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக  அமையும்.
 
வெள்ளை வெங்காயத்தில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்பொருட்கள் நம் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடிய தன்மை உடையது. எனவே தினமும்  வெள்ளை வெங்காயத்தை சாப்பிடும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது அதிக நன்மைகளை தரும்.
 
முக்கியமாக கொதிக்கும் வெயில் காலத்தில் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்விக்கவும், இரவு நேர வியர்வையை தவிர்க்கவும்  உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments