Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரெல்லாம் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது...?

Webdunia
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். 
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
 
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சியம் சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.
 
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால்  தேமல் முற்றிலுமாக மறையும்.
 
குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன்  மூலம் குணமாகும்.  
 
அகத்திக் கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். அகத்திக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை  அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். 
வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர்  தடையில்லாமல் போகும்.
 
அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
 
அகத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகும்.. வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும்.  அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.
 
இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம்.  இரத்த சோகையும் வரலாம். வயிற்று  வலியும் பேதியும் வரலாம்.
 
இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள்  இந்த கீரையை சாப்பிடக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments