Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரியில் ஒன்பது நாட்களில் அம்பிகையின் ரூபங்கள்...!!

Webdunia
புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த தேதிகளில் கோவில்கள் வீடுகளில் அம்பிகை வழிபாடு  களை கட்டும், கொலு வைக்கப்பட்டிருக்கும். 
முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக அம்பிகை காட்சி தருவாள். அன்றைக்கு அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்
 
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் காட்சி கொடுக்கிறாள் அதனால் முல்லை, துளசி கொண்டு அலங்காரம் செய்து புளியோதரை  நிவேதனம் செய்ய வேண்டும்.
 
மூன்றாம் நாள் வராகியாக காட்சி தருகிறாள் கடும் தடைகளை உடைப்பவள் வராஹி அதனால் செண்பகம் மற்றும் சம்பங்கி மலர்கள் கொண்டு இவளுக்கு பூஜை செய்ய வேண்டும் சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.
 
நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் மஹாலட்சுமி தரிசனம் சகல சுபிட்சத்தையும் தரும் அதனால் மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.
 
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி தேவியாக காட்சி அளிக்கிறாள் பராசக்தி அம்பிகை.அன்று முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு  படைத்து வணங்கலாம்.
 
ஆறாம் நாள் இந்திராணி தேவியாக காட்சி கொடுக்கும் தேவிக்கு ஜாதி பூ உகந்தது.
 
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அன்னை காட்சி கொடுக்கிறாள் அன்று அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம்.
 
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த மலர் ரோஜா மலர் சூடி, சர்க்கரை பொங்கல் படைக்கலாம்.
 
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக காட்சி தருகிறாள் அன்று பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். இத்துடன் தினமும் சுண்டலும்  நிவேதனம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments