Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமத்து ஸ்டைலில் கோழி குழம்பு செய்வது எப்படி...?

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:45 IST)
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
தேங்காய் பால் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு (நறுக்கியது)

ஊற வைக்க தேவையான பொருட்கள்:

கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது)
பூண்டு - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6



செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நீரில் நன்கு சுத்தமாக கழுவி, பின் அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு அதில் மீதமுள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வைத்து 30 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், கிராமத்து ஸ்டைலில் கோழி குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments