உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்ய..!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
முட்டை - 4
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - 2
வெண்ணெய் அல்லது ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
 
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.
 
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணெய் சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது  வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான  உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments