Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் இறால் சில்லி மசாலா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பெரியவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய்பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
எண்ணெய் தனியாக பிரிந்தவுடன் இறாலை சேர்த்து கிளறவும். முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய்பால் சேர்க்கவும். இறால் வெந்து மசாலா கெட்டியானவுடன்  கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் சில்லி மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments