சுவையான சிக்கன் போண்டா செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள் :
 
சிக்கன் கைமா - கால் கிலோ (எலும்பு நீக்கியது) 
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
போண்டா மாவு - 250 கிராம் 
சிக்கன் மசாலா - 3 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள்தூள் - அரை டேபிள் ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
பூண்டு - 5 பல் 
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன் 
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன் 
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு 
பொட்டுக் கடலை - 50 கிராம் 
இஞ்சி - 2 சிறிய துண்டு 
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
* எலும்பில்லா சிக்கனை கொத்தி (கைமா) வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். மிக்சியில் சின்ன  வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை,  தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியா சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 
* ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெய்யில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.  சுவையான சிக்கன் போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments