Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேஸ்டியான இறால் பெப்பர் ப்ரை செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க  வேண்டும்.
 
பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவேண்டும்.
 
பின்னர் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊறவைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமானது வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இப்போது சுவையான இறால் பெப்பர் ப்ரை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments