இறால் மிளகு தொக்கு செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1  ஸ்பூன்
சீரகத் தூள் - 1  ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - அலங்கரிக்க
கடுகு - தாளிக்க

 
செய்முறை:
 
முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து  தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும். தண்ணீர் சேர்த்து இறாலை 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
 
இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி  இறக்கவும். சுவையான இறால் மிளகுத் தொக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments