Publish Date: Wed, 31 Jul 2019 (15:01 IST)
Updated Date: Wed, 31 Jul 2019 (15:23 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த சூழ்நிலையிலும் முயற்சியை தளர விடாத எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.